Homeஉலகம்உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா!

உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா!

உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சில் தீர்வு எட்டப்படவில்லை.

இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சு துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் 3 சுற்றுகளாக நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறும்போது, “உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல்வேறு வழிகளில் நமது நாட்டின் தலைவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இப்போதைக்கு, பேச்சுவார்த்தையை நிறுத்துவது குறித்து பேசுவது மிகவும் துல்லியமாக இருக்கும்.

இளஞ்சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து அனைத்தையும் நேர்மறையாகப் பார்க்க முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை பணிகள் உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular