Homeஉள்நாடுபடையினர் வேட்டையாடப்படுகின்றனர்!

படையினர் வேட்டையாடப்படுகின்றனர்!

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து, நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர்.

புலிகள் அமைப்பு, கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை.
பயங்கரவாதிகளுக்காக (புலிகள்)சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. ஆனால் படையினருக்கு அமைத்தால் அதனை இனவாதாக காட்ட முற்படுகின்றனர்.

முன்னாள் கடற்படை தளபதியொருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார். இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகின்றது. எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும்.” – என்றார் நாமல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular