Homeஉள்நாடுஅமைச்சரவை மாறுமா? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்!

அமைச்சரவை மாறுமா? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்!

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

” பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையில் மாற்றம் வரவுள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன. இப்படியான தகவல்கள் இலங்கைபோன்ற நாடுகளுக்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஏனெனில் அரசியல் ஸ்தீரதமற்ற தன்மை நிலவும் நாடொன்றுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிய முதலீடுகளை செய்ய முன்வரமாட்டார்கள்.

எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, வராதா என்பதையும், அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதையும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது விடயத்தில் தாமதம் நிலவக்கூடாது. அறிவிப்பை வெளியிட்டால்தான் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்படும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular