Homeஉள்நாடுசீரற்ற காலநிலை: நுவரெலியாவில் படகு சவாரி நிறுத்தம்!

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் படகு சவாரி நிறுத்தம்!

நுவரெலியாவில் அடை மழை பெய்துவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவுவதால் நுவரெலியா, கிரகரி வாவியில் படகு சவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை படகுசவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் படகு சவாரி பாதிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என படகு சேவையை வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

வி.தீபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular