Homeஉலகம்5 மடங்காகிறது இந்தியாவின் இராணுவ பட்ஜட்!

5 மடங்காகிறது இந்தியாவின் இராணுவ பட்ஜட்!

 

இந்தியாவின் இராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய ராணுவத்துக்கு அதிகளவு நிதி ஒடுக்கீடு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் 1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில 8.8 லட்சம் கோடியாக உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 30 ஆயிரம் கோடியாக உள்ளது. இது ரூ.2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும் எனவும்.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடியாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும்.

அத்துடன், பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும்.

முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும். சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது எனவும் மேற்படி கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular