Homeஉள்நாடுசஜித் அணிக்குள் அரசியல் பூகம்பம்? தொகுதி அமைப்பாளர்கள் இராஜினாமா!

சஜித் அணிக்குள் அரசியல் பூகம்பம்? தொகுதி அமைப்பாளர்கள் இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தோட்டை தொகுதி அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, தொகுதி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சம்பிக்க விஜேவர்தனவும் பதவி விலகியுள்ளார்.

காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொடவும் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற சமிந்த விஜேசிறி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உள்ளுராட்சிசபைகளுக்கான ஆசனபங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டே உள்ளக மோதல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், இவர்களின் பதவி விலகல் கடிதங்களை கட்சி தலைவர் ஏற்பாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular