Homeஉள்நாடுஆசன பங்கீடு தொடர்பில் ம.ம.மு. அதிருப்தி: விரைவில் அதிரடி முடிவு!

ஆசன பங்கீடு தொடர்பில் ம.ம.மு. அதிருப்தி: விரைவில் அதிரடி முடிவு!

உள்ளுராட்சி சபைகளில் பங்காளிக்கட்சிகளுக்குரிய போனஸ் ஆசன பங்கீடு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை தொடர்பில் மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமது கட்சி உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள இராதாகிருஷ்ணன், அங்கிருந்து இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு,
‘நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் தனித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட இடங்களில் அதிக உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது.

ஏனைய இடங்களிலும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் இதன் மூலம் ஜக்கிய மக்கள் சக்திக்கு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்துள்ளார்கள்.
குறிப்பாக நுவரெலியா மாநகர சபையில் ஜக்கிய மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் மாத்திரமே வட்டாரத்தை வெற்றி கொண்டார்.

எனவே இவ்வாறான ஒரு நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி தற்பொழுது போன்ஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுப்பதில் பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களின் நானும் ஒருவன். எனவே இது தொடர்பாக எமது கட்யிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனை முறையாக பங்கீடு செய்ய ஜக்கிய மக்கள் சக்தி தவறும் பட்சத்தில் கட்சி பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் இதனை கருத்தில் கொண்டு ஜக்கிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும் எனவும் அவர் தமது அதிருபதியில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular