Homeஉள்நாடுஅச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி கைபற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அரசாங்க நிதியில்லாமல் உகந்த சேவையைப் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதையும் சரியாக செய்யத் தெரியாது, பொய்யும் ஏமாற்றுமே தொடர்ந்து வருகிறது. அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு மக்களுக்கும் சேவையாற்றுவதே ஜனாதிபதியின் பொறுப்பாகும். எனவே இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்களின் வாக்குப்பலத்தால் வெற்றிபெறச் செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

பொத்துவில் தேர்தல் தொகுதி லா{ஹகல பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

” எமது நாட்டு மக்கள் ஜே.வி.பியையும், திசைகாட்டியையும் ஆதரித்து ஆட்சியை வழங்கினர். வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றோம் என்று கூறினர். ஆனால் இன்று இந்த அரசாங்கம் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஊழல்வாதிகளை பிடிப்போம் என்றனர். போதுமான எந்த ஏற்பாடுகளும் இதுவரையில் இல்லை.

பொருட்களின் விலைகள் அதிகரித்து வருமானம் குறைந்துள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் தமது மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த அரசாங்கம் பொய், மோசடிகளைக் கோலோச்சி மக்களை ஏமாற்றி வருகின்றது.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular