Homeஉள்நாடுஅமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன?

அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன?

அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, இதனை எதிர்கொள்வதற்குரிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும், தேசிய வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2028 ஆம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாட்டு கடனை மீள செலுத்த ஆரம்பிக்க வேண்டியுள்ளமையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

ரணிலின் அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது….

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular