Homeஉலகம்தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!

தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!

தென்கொரியாவில் எதிர்வரும் ஜுன் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது பதவி நீக்கத்தை அந்த நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது.

தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். எனவே ஜனாதிபதி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular