Homeஉலகம்சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16 பூமிக்கு திரும்புவார்: நாசா அறிவிப்பு

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16 பூமிக்கு திரும்புவார்: நாசா அறிவிப்பு

விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் எதிர்வரும் 16ஆம் திகதி பூமிக்கு திருப்பவுள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.

கடந்த ஜூன் 5 ம் திகதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும் பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த பிறகு,எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular