Homeஉள்நாடுகொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் எரான்?

கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் எரான்?

பொருளாதார நிபுணரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்னவை கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு மேயர் வேட்பாளராக ஹிருணிக்காவை களமிறக்குவது பற்றி ஆராயப்பட்டாலும் அவர், கடுவலை தொகுதியை விட்டு வரப்போவதில்லை என தெரியப்படுத்தியுள்ளார்.

அதேபோல மேயர் வேட்பாளராக களமிறங்குவதற்கு இம்முறையும் எம்.பி. பதவியை துறப்பதற்கு தயாரில்லை என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே எரான் விக்கிரமரத்னவை களமிறக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular