உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, கொழும்பு, கண்டி உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கம்பஹா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின்கீழ் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கவுள்ளது.
கொழும்பு, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் சபைகளுக்கு ஏணி சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் போட்டியிடும் சின்னம் பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
