Homeஉள்நாடுநுவரெலியா, பதுளையில் இதொகா தனிவழி!

நுவரெலியா, பதுளையில் இதொகா தனிவழி!

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனித்தும், கூட்டணியாகவும் களமிறங்குவதற்கு இதொகா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இதொகா நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தனித்து களமிறங்கவுள்ளது.

இவ்விரு மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழாத பகுதிகளில் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. எனினும், எந்த தரப்புடன் கூட்டணி என்பது பற்றி கட்சியின் உயர்பீடம் விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்பிலும் இன்னும் உறுதியான முடிவுக்கு காங்கிரஸ் வரவில்லை. எனினும், 2018 ஆம் ஆண்டுபோல் தனித்தும், கூட்டணியாகவும் அக்கட்சி களமிறங்கவுள்ளது. எந்த தரப்புடன் கூட்டு என்பது பற்றியே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular