Homeஉள்நாடுமின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி: வவுனியாவில் சோகம்

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி: வவுனியாவில் சோகம்


மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 6 வயது சிறுமி ஒருவர் கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். அவர் தவறுதலாக கீழே வீழ்ந்தபோது நீர் இறைக்கும்  இயந்திரத்துக்குச் சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீட்டார் மேற்படி சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular