சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியரே, ஏனைய ஊழியர்களினால் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சமபவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவர் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிபடுத்தியுள்ளார்.இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.