HomeTop newsஇன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை கூடுகிறது பாராளுமன்றம்

இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை கூடுகிறது பாராளுமன்றம்

இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம், 1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இருப்பினும், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள சில விடயங்களை பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக திருத்தி சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தப்பட்ட பிரேரணை மீண்டும் சமர்ப்பிக்கப்படாததால், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறாது என பாராளுமன்றச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular