இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
