HomeTop newsநேபாள வெள்ளப் பேரழிவு - ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார

நேபாள வெள்ளப் பேரழிவு – ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular