நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறையைக் கழிப்பதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்கும் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் மக்கள் காரணமாக, அந்த நிலையத்தில் இன்று கடும் பயணிகள் நெரிசல் காணப்படுவதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
