HomeTop newsதமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று(03.08.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உதயநிதி மீது பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular