HomeTop newsமுன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular