Homeவிளையாட்டுஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (27) இடம்பெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது, மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 05 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த அணியின் சார்பில் Amir Jangoo ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando மற்றும் Milan Rathnayaka ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular