இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க தொடர்பில் கட்சியின் உள்ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, “நிச்சயமாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் எடுக்கக்கூடிய மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எமது கட்சியில் தவறு செய்பவர்களுக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் எந்தவித இடமோ சந்தர்ப்பமோ இல்லை” என வலியுறுத்தினார்.
