HomeTop newsஅரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றுநிருபம்

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றுநிருபம்

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் சமத்துவத்துடனும் முன்னெடுக்க 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்தி, முறைகேடுகளை குறைப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் ஆலோசனைகள் அடிப்படையில் புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்புகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இச்சுற்றுநிருபம், 2027 முதல் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular