HomeTop newsநீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படுகிறதா?

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படுகிறதா?

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (11) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீதிபதிகளுக்கு மேலதிகமாக ஏனைய சில தொழில்வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.

அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகள் குறித்து சாதகமாகப் பரிசீலித்து வருவதாகவும், எனினும் அவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தபோதிலும், சில கோரிக்கைகள் அரசியல் பின்னணியைக் கொண்டவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular