HomeTop newsசசி வீரவங்சவுக்கு மீண்டும் சிறைத்தண்டனை - முழு விபரம் உள்ளே

சசி வீரவங்சவுக்கு மீண்டும் சிறைத்தண்டனை – முழு விபரம் உள்ளே

முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீடு செய்த பெண் பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவங்சவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தண்டனைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular