Homeஉலகம்ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் டாங்கர் மீது தாக்குதல் - 3 இந்திய மாலுமிகள் பலி

ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் டாங்கர் மீது தாக்குதல் – 3 இந்திய மாலுமிகள் பலி

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்பகுதியில் செட்டபெல்லோ என்ற எண்ணெய் டாங்கர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துவிட்டதாக மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓமன் கடற்படையினரின் தீவிரத் தேடுதல் வேட்டையில் உயிரிழந்த 3 பேரில், இரண்டு மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மற்றுமொருவரின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன

இந்த மூன்று மாலுமிகளும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை மீறி இக்கப்பல் வந்ததாக கூறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதுகுறித்து டெல்லியில் உள்ள தற்காலிக அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்குள் ஓமன் கடற்பரப்பில் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

இதனிடையே ஓமன் துறைமுகத்திற்கு அருகே மற்றொரு வணிகக் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று மதியம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular