Homeஉள்நாடுபோலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது

போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை உள்ளிட்ட நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 600,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular