நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும், உயிரிழந்தவர்களில் ஒரு பாடசாலை மாணவனும் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
