HomeTop newsயோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது

யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது

நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இந்த மனுவை விசாரணைக்காக ஜூன் மாதம் 16ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

குறித்த மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டநேரம் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular