விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கைக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட ஆய்வுகள் இன்று (27) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மதிப்பீட்டு செயல்முறையின் பின்னர், இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்து, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவு மீட்பு விலைக் கட்டமைப்பை மீண்டும் அமல்படுத்துவது, இந்த ஆய்வுக்கு ஒப்புதல் பெறுவதற்கான முக்கிய அம்சமாக இருக்கும் என IMF தகவல் தொடர்பு இயக்குனர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிதியுதவி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், நடைபெற்று வரும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
