மியான்மரில் சுரங்கத் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவிலான அரிய மாணிக்கக்கல்லொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
11,000 காரட் எடையுடைய இந்த மாணிக்கக்கல் சுமார் 2.2 கிலோகிராம் அல்லது 4.8 பவுண்டுகள் எடையுடையதாகும். மியான்மரின் இரத்தினக்கல் சுரங்கத் தொழிலின் முக்கிய மையமாக விளங்கும் மேல் மாண்டலே பிராந்தியத்தின் மோகோக் நகருக்கு அருகில் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயர்தர நிறத் தன்மை மற்றும் அபூர்வ தரம் காரணமாக இந்த மாணிக்கம் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.
இந்த மாணிக்கக்கல் மஞ்சள் சாயலுடன் கூடிய ஊதா-சிவப்பு நிறத் தோற்றத்தையும், மிதமான ஒளிபுகும் தன்மையையும், அதிக பிரதிபலிப்பு கொண்ட மேற்பரப்பையும் உடையதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் இரத்தினக்கற்களில் சுமார் 90 சதவீதம் மியான்மரில் இருந்து கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டின் இராணுவ ஆட்சிகளுக்கு பல தசாப்தங்களாக இரத்தினக்கல் வர்த்தகம் முக்கிய வருமான மூலமாக இருந்து வருகிறது.
