Homeசெய்திஹைதராபாத் அணி அபார வெற்றி!

ஹைதராபாத் அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் ருத்ரதாண்டவம் ஆடினார்.

வெறும் 44 பந்துகளில் சதம் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 123 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்த அவரது அதிரடியால், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

244 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி மின்னல் வேகத் தொடக்கம் அளித்தது.

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 76 ரன்கள் (4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் வந்த ஹென்றிச் கிளாசென் சிக்ஸர் மழை பொழிந்து, வெறும் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு 36 ரன்கள் குவித்தார்.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular