Homeசெய்திஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

ஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையின் அதிபர் எஸ். மகேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்ன மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிவப்பிரகாசம் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular