Homeஉள்நாடுதோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

தோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந் தெரியாதவர்களே, இவ்வாறு வீட்டை அடி உடைத்துள்ளனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவரும் தலையில் தலைகவசம் அணிந்திருந்தாகவும் வந்தர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதலுக்குதல் நடத்தியதில் தோட்டத் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கறுப்பு ஆடை அணிந்து. ஹெல்மட்டுடன் வந்த கும்பல் யார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வீடு எதற்காக உடைக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

( தோட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து இது பற்றி இன்னும் தகவல் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டால் அதனையும் பதிவிட நாம் தயார். சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த வீடு அமைக்கப்படவில்லை என இருந்தால்கூட, அதனை சட்டப்பூர்வமாகவே அகற்ற வேண்டும். எப்படி வன்முறை குழுவொன்று சட்டம், ஒழுங்கை கையில் எடுக்கலாம் என்பதே அனைவரது கேள்வியாகும்.)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular