Homeஉள்நாடுதோல்வியில் இருந்து மீளுமா மும்பை?

தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 30 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத், மும்பை ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, டெல்லிக்கு எதிரான ‘திரில்’ வெற்றிக்குப் பிறகு அசுர பலம் பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளைத் துவம்சம் செய்த குஜராத் அணி, தற்போது ஹாட்ரிக் வெற்றிகளுடன் உத்வேகத்தில் உள்ளது.

மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை அணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய அந்த அணி அதன் பிறகு விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular