Homeஉள்நாடுகல்போக் தமிழ் வித்தியாலய அதிபராக சகாயமேரி நியமனம்!

கல்போக் தமிழ் வித்தியாலய அதிபராக சகாயமேரி நியமனம்!

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்போக் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி. டி. சகாயமேரி அவர்கள் இன்று தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர், இதற்கு முன்னதாக, டெமேரியா இலக்கம் 03 மற்றும் மடுல்சீமை வெரலிப்பத்தன தமிழ் வித்தியாலயங்களிலும் ஆசிரியராகத் தனது சேவையாற்றியுள்ளார்.

புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி. சகாயமேரியை வரவேற்கும் நிகழ்வு, பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular