Homeஉள்நாடுமலையக பிரதிநிதிகளை நாளை சந்திக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

மலையக பிரதிநிதிகளை நாளை சந்திக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், மலையக பிரதிநிதிகளை கூட்டாக சந்திக்கவுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையே அவர் இவ்வாறு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நாளை (19) பிற்பகல் 2 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மலையக தமிழர்களுக்காக இந்தியாவின் உதவித் திட்டங்கள், வீட்டும் திட்டம், இந்திய புலமைப்பரிசில் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்பொது கலந்துரையாடப்படவுள்ளன.

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular