Homeஉலகம்அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்!

அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்தது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் கடந்த 8 ஆம் திகதி இருவாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நேற்று ஆரம்பமானது.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இதில் பங்கேற்றனர்.

14 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தரப்பினரும் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular