Homeஉலகம்ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன?

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

டைம்ஸ் யுகேவின் செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மொஜ்தபா காமேனி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு கோம் நகரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இருப்பிடத்தை முதன்முறையாக வெளிப்படுத்தும் அந்த உளவுக் குறிப்பை தாங்கள் அறிந்ததாகவும் டைம்ஸ் யுகே குறிப்பிட்டுள்ளது.

மேலும், “ஈரான் ஆட்சியின் எந்தவொரு முடிவெடுக்கும் செயலிலும் அவரால் பங்கேற்க இயலாது” என டைம்ஸ் யுகே செய்தி வெளியிட்டது.

மேற்கு ஆசியாவில் மோதல் வெடித்ததிலிருந்து, மொஜ்தபா காமேனி எந்தவொரு பொதுவெளியிலும் தோன்றவில்லை. அவர் கூறியதாகக் கூறப்படும் செய்திகளை மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அதேவேளை,செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணிக்குள் (இலங்கை நேரப்படி புதன்கிழமைகாலை 5.30)ஒப்பந்தத்தை எட்டுமாறு ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular