Homeஉள்நாடுசின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

 

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கயல்” சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36).

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் பிப்பின் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சுபாஷிணி தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சென்னை வந்த அவர் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல சுபாஷிணி , கணவர் பிப்பின் சந்திரனுடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்தார்.

இதன்போது இருவருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் மனவேதனை அடைந்த சுபாஷிணி திடீரென தனது படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார் எனவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular