Homeஉலகம்ஹார்முஸ் நீரிணையை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை ஏற்றம் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை ட்ரம்ப் கொடுத்துள்ளார்.

“ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியை ஈரான் செய்தால், அவர்கள் இதுவரை எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் இருபது மடங்கு கூடுதலாக மிக கடுமையான தாக்குதலை அமெரிக்கா மேற்கொள்ளும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular