Homeஉள்ளூர்கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனை

கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களினால் கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் நேற்று இரவு (03) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது பொது சுகாதார பரிசோதகர்களினால் தயிர் விற்பனை செய்யும் நபர்களுக்கு சுகாதார விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் மேலும் தயிர் விற்பனை நிலையத்திலிருந்து தயிர் மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பகுப்பாய்விற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தயிர் உற்ப்பத்தி திகதி லேபிள் ஒட்டுதல் முறையற்ற வகையில் லேபிள் ஒட்டுதல் தொடர்பில் விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப் பட்டனர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular