ஜா- எல பகுதியில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 75 கிராம் ஹெரோயின், 50 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா மற்றும் கொட்டுகொட பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
