Homeஉள்நாடுஇலங்கை, ஆஸ்திரேலிய உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்

இலங்கை, ஆஸ்திரேலிய உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்

 

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சு நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆஸ்திரேலிய பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இதன்போது கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular