Homeஉள்நாடுஜனாதிபதி - புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

ஜனாதிபதி – புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular