Homeஉள்நாடுஅநுர போன்றே ஹரிணியும் எமக்கு முக்கியம்: இந்த ஆட்சி கவிழாது! ஜே.வி.பி. திட்டவட்டம்

அநுர போன்றே ஹரிணியும் எமக்கு முக்கியம்: இந்த ஆட்சி கவிழாது! ஜே.வி.பி. திட்டவட்டம்

” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போன்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எமக்கு மிக மிக்கியமானவர். எம்மிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசாங்கமும் கவிழாது.”
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய நீக்கப்பட்டு, அப்பதவிக்கு பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் கசிந்துள்ள பின்னணிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தோல்விகளில் இருந்து மீண்டுவந்தவர்களே நாம். எனவே, எம்மிடையே எந்தவொரு விடயத்துக்காகவும் பிரச்சினை கிடையாது. ஜனாதிபதி அநுர போன்றே எமது அரசியல் இயக்கத்தில் உள்ள சிறந்த ஆளுமைமிக்கவர்தான் பிரதமர் ஹரிணி அமரசூரிய.

இந்நிலையில் எம்மிடையே பிளவு எனக்கூறி சஜித், நாமல் ஆகியோர் அழுது புலம்பி வருகின்றனர். அவர்கள் அணிக்குள்தான் பிளவு உள்ளது. ஐந்து வருடங்களுக்கு மக்களுக்குரிய சேவையை வழங்குவோம். இந்த ஆட்சி கவிழாது. ஐந்து வருடங்களுக்கு பிறகு மக்கள் ஆணையை பெற செல்வோம்.

நாம் எமது பிரதமரை பாதுகாப்போம். எமது அமைச்சர்களை பாதுகாப்போம். பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்துள்ளது. அவர்களின் அரசியல் கேம் என்னவென்பது எமக்கு புரியும். எனவே, பிரதி அமைச்சரையும் நாம் பாதுகாப்போம்.” – என பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular