Homeஉள்நாடுஜெனிவா இராஜதந்திர சமர் செப்டம்பர் 8 இல் ஆரம்பம்: இலங்கை குறித்து புதிய தீர்மானம்!

ஜெனிவா இராஜதந்திர சமர் செப்டம்பர் 8 இல் ஆரம்பம்: இலங்கை குறித்து புதிய தீர்மானம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒக்டோபர் 8 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.எனவே, இலங்கை தொடர்பான அவரின் அறிக்கையும் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular