Homeஉள்நாடுமொட்டு கட்சி ஆட்சி மலரும்: வேலைத்திட்டம் ஆரம்பமாம்!

மொட்டு கட்சி ஆட்சி மலரும்: வேலைத்திட்டம் ஆரம்பமாம்!

எதிர்காலத்தில் நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்களில் 95 சதவீதமானோர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மீண்டும் கட்சிக்கு திரும்பியுள்ளனர்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்ற தொகுதிகளுக்கு நாமல் ராஜபக்ச தற்போது நேரடி விஜயம் மேற்கொண்டு சந்திப்புகளை நடத்திவருகின்றார். கட்சியை பலப்படுத்தி, ஆட்சியை பிடிப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular